நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையிலான தனிப்படை கருணாசை கை செய்தது. கைது செய்யப்பட்ட கருணாஸ் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். கைதுக்கு முன்னதாக கருணாஸ் வீட்டின் முன் 200 போலீசார் குவிக்கப்பட்டனர்.

கைது செய்யப்ப்பட்டு அழைத்துச்செல்லப்படும்போது செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ’’பேச்சுரிமைக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் சட்டத்தை மதிப்பவன் நான். என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நான் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன். கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யும் அளவிற்கு நான் என்ன தவறாக பேசிவிட்டேன் என்று தெரியவில்லை.
எம்.எல்.ஏவை கைது செய்யும் முன் சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டும். சபாநாயகர் அனுமதி அளித்தால்தான் எம்.எல்.ஏவை கைது செய்ய முடியும். சபாநாயகரிடம் அனுமதி பெற்றார்களா என்று தெரியவில்லை’’என்று கூறினார்.
ஆதரவாளர்கள் திரண்டு வந்து அதிமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது கருணாஸ், ’’சிறைச்சாலை எங்களுக்காகத்தான் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள்’’என்று ஆவேசமாக கூறினார்.