இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.
நாளை(ஞாயிற்றுக்கிழமை) இந்த கூட்டம் வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் திட்டமிட்டுள்ளார்.
இதன்காரணமாக சம்பந்தன் கலந்து கொள்ளும் வகையில் கூட்டத்தை வவுனியாவில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.