கிட்டு பூங்காவில் கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சாரம்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்படும் மாபெரும் கூட்டம் யாழில் இடம்பெறுகிறது.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் , உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார், இங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன், புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.