-

12 மே, 2020

www.pungudutivuswiss.com
வழமைக்குத் திரும்பிய பிரான்ஸ்! - இல்-து-பிரான்சுக்குள் பதிவான உயிரிழப்புக்கள்
நேற்று திங்கட்கிழமையுடன் பிரான்ஸ் ஓரளவு வழமைக்குத் திரும்பியிருந்தது. தொடருந்து நிலையங்கள் கட்டுப்பாட்டை மீறி பலத்த நெரிசலை சந்தித்திருந்தது.
இந்நிலையில், பிரான்சில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 263 பேர் சாவடைந்திருந்தனர். இதில் இல்-து-பிரான்சுக்குள் 55 பேர் சாவடைந்துள்ளனர். பிராந்திய சுகாதார நிறுவனம் (l'Agence régionale de Santé) வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இதுவரை இல்-து-பிரான்சுக்குள் 6,534 பேர் சாவடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக குறைவடைந்திருந்த சாவு எண்ணிக்கை, நேற்றைய நாளில் 55 ஆக பதிவானது.
அதேவேளை, அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,137 ஆக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 1,182 ஆக இருந்தது.

ad

ad