புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2020

www.pungudutivuswiss.com
உயிர்களிடத்தில் அன்பு காட்டு .  ஈகை செய்.இரக்கம் கைவிடாதே
அளவுக்கதிகமாக  சொத்து சேர்த்து என்ன  வரப்போகிறது . சேர்த்தாலும்  ஒரு சிறுதுளியாவது  ஏழைகளுக்கு  கொடுக்கலாமே  உறவுகளே

ஒரு    உண்மை சம்பவம்  இந்தியாவில்  பெரிய பணக்காரன் . கோடிக்கணக்கான  சொத்துக்களுக்கு அதிபதி . வங்கி சம்பந்தமான  நடைமுறையில்  முறைகேடாக  என்னவெல்லாமோ செய்து  பிடிபட்டு  வழக்கு  விசாரணை வந்தது . காவலர்  நீதிமன்றுக்கு அழைத்து வந்தனர் . முறைப்பாடு , குற்றப்பத்திரிகையை பார்த்துவிட்டு  நீதிபதி கேடடார் . காலை சாப்பிடடாயா என்று . இல்லையே  என்றதும்  காலை உணவாக  இட்லி வரவழைக்கப்பட்டு சாப்பிட  அனுப்பி வைத்தார் .  சாப்பிட்டு வந்ததும்  ஏன் இட்லிகளை  மீதம் வைத்துவிடடாய்   என்று கேட்க போதும் இதுக்கு மேலே சாப்பிட முடியதையா என்றார் . மத்தியானதுக்கும் சேர்த்து சாப்பிடலாமே என்று நீதிபதி கேட்க அதெப்படி முடியும் ஐயா என்கிறார் .   எத்தனை வயது மட்டும் நீ உயிர் வாழ்வாய்  என்று  கேட்க  எனக்கு தெரியுமா இன்றோ நாளையோ என்கிறார் . இப்போது உன் வயது 62  . மிஞ்சி மிஞ்சி போனால்  100 வயது மட்டும்  வாழப்போகிறாய் . இதுவரைக்கும்  இருக்கும் உன்  சொத்தே  எத்தனையோ ஆயிரக்கணக்கானோர்  நூறு வயது மட்டும்  சாப்பிடக்கூடியது  அதனை வைத்துக்கொண்டும் என்  வீணாக முறைகேடாக இன்னும் சொத்து சேர்க்க  யோசிக்கிறாய் இப்போது நான்  உனக்கு சில வருடங்களோ அல்லது சாகும்வரையோ  சிறையில் இருக்கும்படி  தீர்ப்பு வழங்கினால் உன் சொத்துக்களை நீ அனுபவிக்க முடியாது என் நீ சாப்பிடும் சாப்பாடு கூட  சிறை உணவு தானே   என்று.வெட்கி தலைகுனிந்தான் கோடீஸ்வரன் 

ad

ad