புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2020

கருணாவால் வறுத்தெடுக்கப்படும் மகிந்த

கிழக்கில் கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் தமது சொந்த தொகுதியில் விரட்டியடிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் நிற்பது யாவரும் அறிந்த விடயம் ,அவரது அங்குள்ள ஒவ்வொரு இடத்திலும் தேர்தல் பிரச்சாரமாக முஸ்லிம் எதிர்ப்பு கருத்துகளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதி போன்ற மாய தோற்றமும் ஏற்படுத்தி வருகின்றார்.

கருணா. இதுவரை காலமும் சிங்கள மக்களிடமும் சிங்கள மொழி ஊடகங்களிலும் பிரபாகரன் பயங்கரவாதி தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் பயங்கரவாதிகளை அழித்த வீரத்தளபதி மகிந்த ராஜபக்ச மற்றும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் கொலை செய்யப்படவில்லை செத்தது அத்தனையும் புலிப்பயங்கரவாதி என்று சிங்கள மக்களை உசுப்பேத்தி குழிர் காய்ந்தவர்

இம்முறை வழமைக்கு மாறாக தேர்தல் வெற்றிக்காக தமிழ் மக்களை உசுப்பேத்த தனது பிரச்சாரத்தின் போது ஒரே நாளில் 3000 வரையான சிங்கள இராணுவத்தை அழித்த நான் கொரொனாவை விட ஆபத்தானவன் என்று பெரும் வெடிகுண்டை வீசினார்.

நான் கொரொனாவை விட ஆபத்தானவன் 3000 வரையான சிங்கள இராணுவத்தை அழித்தேன் எனும் கருத்து சிங்கள மொழி இணையதளங்களில் சிங்களத்தில் வெளியாகியதால் தாங்கள் சிங்கம் தாங்கள் சொந்த பலத்திலே புலிகளை அழித்ததாக மமதையில் இருந்த சிங்களவருக்கு கோபமும் ஆத்திரமும் ஏற்பட்டது.

ஒன்றிரன்டு இராணுவத்தை கொன்றர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு அரசியல் கைதியாக பல ஆண்டுகளாக அப்பாவிகளை சிறைகளில் அடைத்து வைத்துவிட்டு பெரிய பயங்கரவாதியை நாம் வெளியில் விடுவதா?

எத்தனையோ சிங்கள இராணுவ தளபதிமார் ஓய்வு பெற்று இருக்கும் போது அவர்களுக்கு தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கொடுக்காமல் எங்கள் இராணுவத்தை கொன்ற கொலைகாரனுக்கு கொடுப்பதா?

போன்ற கருத்துகளுடன் சிங்கள இளைஞர்கள் புத்தி ஜீவிகள் மற்றும் நெட்டிசன்கள் என பலதரப்பட்டோர் மகிந்தவை வறுத்தெடுக்கின்றனர்.



கருணாவால் வெளியிடப்பட்ட கருத்து மகிந்தவின் இருப்பையும் ஆட்டம்காணச் செய்திருக்கிறது என்பதுதான் உண்மை

ad

ad