26 December, 2020, Sat 16:05 | views: 1363
பிரித்தானியாவில் இருந்து பிரான்சிற்குள் வருவதற்காகக் காத்திருந்த பாரஊர்திகள், பிரான்சின் எல்லைகள் மூடப்பட்டதையடுத்து, 15.000 இற்கும் அதிகமான பாரஊர்திகள், பிரித்தானியாவின் KENT விமானப் பயிற்சி ஓடு தளத்தில் தரித்து நிறுத்தப்பட்டிருந்தன.
இராணுவத்தினரின் உதவியுடன், 15.266 சாரதிகளிற்கும் கொரோனாச் சோதனைகள் நடாத்தப்பட்டன.
இதில் 36 பேரிற்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களிற்காக மேலதிகச் சோதனைகள் நடாத்தப்பட உள்ளன.

கொரோனாப் பரிசோதனைகள் முடிந்து 15.000 இற்கும் அதிகமான பார ஊர்திகள், விமான ஓடுதளத்தில் இருந்து வெளியேறி டோவர் துறைமுகம் நோக்கி விரைந்துள்ளன என, பிரித்தானியாவின் போக்குவரத்து அமைச்சர் Grant Shapps தெரிவித்துள்ளார்.