
சமூகஊடகத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு ஒருசட்டம் என்பதனை வெறும் வார்த்தைகளிற்கு அப்பால் சென்று உண்மையில் நடைமுறைப்படுத்துவது எப்படி என நாட்டை நேசிப்பவர்கள் சிந்திக்கவேண்டிய தருணம் வந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹரசிறைச்சாலை கலவரத்தின் பின்னர் சிறைச்சாலை வாசலில் தாய்மார்கள் கண்ணீர்விட்டு அழுதது தென்பகுதியில் கண்ணீர்விட்ட தாய்மார்களை நினைவுபடுத்தியது என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் நாங்கள் வடபகுதியின் தாய்மார்களின் கண்ணீரை மாத்திரமில்லை; அரச பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் கண்ணீரையும் பார்த்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலை செய்யப்படுபவர்கள் எங்களின் தேசத்தின் பிள்ளைகள்,என தெரிவித்துள்ள மங்களசமரவீர தென்பகுதியில் கொல்லப்பட்ட சிங்களவர்கள் வடபகுதியில் கொல்லப்பட்ட தமிழர்கள் மகரசிறைச்சாலையில் கொல்லப்பட்டவர்கள் 2012 இல் வெலிக்கடையில் கொல்லப்பட்டவர்கள் எங்களின் பிள்ளைகள் எங்கள் நாட்டின் பிள்ளைகள் என்பதை நாங்கள் மறக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக இடம்பெறும் விடயங்களை பார்க்கும்போது சுதந்திரத்திற்கு பின்னர் தாய்மார்களின் கண்ணீரை தவிர மக்களிற்கு வேறு எதுவும் என்ற கருத்து நிராகரிக்க முடியாதது போல தோன்றுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.