புரேவி புயல் காரணமாக யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உரிய காரணத்தை கண்டறிந்து சீரமைத்து மின் விநியோக நடவடிக்கை இடம்பெறும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.