புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2021

பிரதமர் அறிவிப்பு வெளியானது

www.pungudutivuswiss.com


 

சற்று முன்னர்(8 மணிக்கு) பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு வெளியானது. நாடு தழுவிய ரீதியில் முழு அளவிலான லாக் டவுனை அவர் வரும்

பெப்ரவரி மாதம் வரை அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில்,

* பள்ளிகள் எதுவும் அடுத்த மாதம் இறுதிவரை திறக்க முடியாது.
* வீட்டை விட்டு தேவை இல்லாமல் வெளியே செல்ல முடியாது.
* தவிர்க்க முடியாத காரணம் என்றால் மட்டுமே செல்ல முடியும்
* கடைகளுக்கு சென்று உணவு பொருட்களை வாங்க முடியும்.
* வீட்டில் இருந்து வேலை செய்ய முடியும் என்றால் செய்யவும்.
* அதி முக்கிய வேலையில் உள்ளவர்கள் வேலைக்கு செல்ல முடியும்.

இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே தேவை இல்லாமல் செல்வது. நண்பர்கள் உறவினர் வீடுகளுக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சொல்லப் போனால் துணிக் கடைகள் போன்ற அத்தியவசியம் இல்லாத பொருட்களை விற்க்கும் கடைகளும் மூடப்படுகிறது. தமிழர்களே நீங்கள் வேலைக்கு செல்வது ஆபத்தானது என்று கருதினால் உங்கள் வேலைத் தளங்களுக்கு அறிவித்து, அரசு தரும் 80% சதவிகித பேர்ஃலோவை எடுக்கலாம்.

வேலை தள உரிமையாளர்கள் அந்த கொடுப்பனவை தர மறுத்தால், யூனிவேர்சல் கிரெடிட் என்று அழைக்கப்படும் அரசாங்க கொடுப்பனவை இன்ரர் நெட் வழியாக அப்பிளை செய்து எடுக்கலாம். வேலைத் தளங்களில் நீங்கள் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடி உங்கள் வேலையை செய்ய முடியும் என்றால், உங்கள் வேலைத்தள உரிமையாளர்களோடு பேசி வேலையை வீட்டில் இருந்தபடியே செய்வது நல்லது.

முன்னைய செய்தி::::::::::::::::::::::::::::  7.00 PM ::::::::::::::::::

இன்று இரவு 12.00 மணி முதல் பிரித்தானியாவில் நாடு தழுவிய முழு அளவிலான லாக் டவுன் அறிவிக்கப்பட உள்ளது. பள்ளிகள் கால வரையறை இன்றி மூடப்படுவதோடு. ஒரு வீட்டில் உள்ளவர்கள் மற்றுமொரு வீட்டுக்கு செல்ல இன்றுடன் தடை போடப்படுகிறது. இன்று 58,000 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில். பிரித்தானியாவின் சுகாதார துறை, முன் எப்பொழுதும் இல்லாதவாறு தடுமாறி வருவதாக கூறப்படுகிறது.  Source : Daily Mail : PM will plunge England into full lockdown in 8pm TV address tonight.

லாக் டவுன் அறிவித்து விட்டு. முழு அளவில் தடுப்பூசிகளை போட்டால் மாத்திரமே பிரித்தானியா ஒரு சீரான நிலைக்கு திரும்பும் என்ற நிலை தோன்றியுள்ளது. இதற்கு அமைவாக பல கட்டுப்பாடுகள் இன்று இரவு 8 மணிக்கு பிரதமாரால் அறிவிக்கப்பட உள்ளது

ad

ad