இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16 பேர், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் 13 பேர், ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் 10 பேர், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 பேர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 2 பேர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒருவர் என மொத்தமாக 45 உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாநகர சபையில் அங்கம் வகிக்கின்றனர்.
இன்று புதன்கிழமை நடைபெற்ற வரவு - செலவு திட்ட வாக்களிப்பில் திட்டத்திற்கு ஆதரவாக 45 உறுப்பினர்கள் யாழ் மாநகர சபையில் 23 பேரின் ஆதரவு இருந்தால் வரவு செலவுத் திட்டம் நிறைவேறும் என்ற நிலையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 10 பேரும் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 பேரும் சிறீலங்கா சுதந்திர கட்சி 2 பேரும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒருவரும் என 24 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் 16 பேரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 3 பேரும் ஐக்கிய தேசிய கட்சியின் இருவரும் வாக்களித்தனர்.