ரஷ்ய அதிபர் புட்டின், தாம் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலை நடத்த உத்தரவிட்டுள்ளதாக அறிவித்த சில நிமிடங்களில் உக்கிரைனில் உள்ள 14 நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் 2ம் தடவையும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது என அதிர்வு இணையம் அறிகிறது. இதுவரை பலர் இறந்திருக்க கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில், 18 பேர் இறந்துள்ளதாகவும் இதில் மேலும் ஒரு சிறுவன் இறந்துள்ளதாகவும் உக்கிரைன் தெரிவித்துள்ளது. உக்கிரைன் நாட்டின் ராணுவத் தளம், கப்பல் படை தளம், பாலங்கள், ராடர் நிலையங்கள், வான் படை தளம் மற்றும் விமான நிலையங்கள் மீது ரஷ்யா கடுமையாக தாக்கி வருகிறது. உக்கிரைன் எல்லையில், 4 இடங்களில் ரஷ்ய ராணுவம் ஏற்கனவே ஊடுருவி விட்டது. உக்கிரைன் நாட்டில் உள்ள டொம்பாஸ் மாநிலத்தில் தமது படைகள் சில தாக்குதலை நடத்தும் என்று புட்டின் கூறி இருந்தார். ஆனால் …