புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2022

'ரஷ்யாவால் அஞ்சுகிறேன்' - வெளிப்படையாக கூறிய பிரித்தானிய பிரதமர்!

www.pungudutivuswiss.com

பிரதமர் ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்து தான் அஞ்சுவதாக பிரித்தானியா பிரதமர் தெரிவித்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, பெலாரஸுடன் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

பிரதமர் ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்து தான் அஞ்சுவதாக பிரித்தானியா பிரதமர் தெரிவித்துள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, பெலாரஸுடன் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது

எனினும், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை உக்ரைன் நிலைமை குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்கா, இத்தாலி, போலந்து, ருமேனியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஐரோப்பிய கவுன்சில், ஐரோப்பிய ஆணையம் மற்றும் நேட்டோ தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் சந்திப்பில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பின் போது ரஷ்யாவால் உக்ரைனில் நிலவும் சூழ்நிலை காரணமாக ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்து தாம் அஞ்சுவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேச நாடுகளிடம் தெரிவித்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்க முடிவெடுத்தால், கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை நேட்டோ நாடுகளுக்கு வலியுறுத்தினார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

ad

ad