ரஷ்ய விமானப்படை விமானங்கள், போலந்து எல்லை வரை சென்று கடும் தாக்குதல் நடந்தியுள்ள நிலையில். போலந்தில் இருந்து வெறும் 12 KM தொலைவில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலையும் நடத்தியுள்ளது. போலந்தி இருந்து உக்கிரைன் நோக்கிச் சென்ற 3 பிரித்தானிய முன் நாள் ராணுவ வீரர்கள் இதில் கொல்லப்பட்டுள்ளார்கள் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் உறுதி செய்ய முடியவில்லை. அவர்கள் சென்ற வாகன தொடர் அணி மீதே ரஷ்ய போர் விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது என கூறப்படுகிறது. போலந்தில் இருந்து தரை வழியாக, பெரும் ஆயுதங்கள் உக்கிரைனுக்கு செல்கிறது. நாளாந்தம் இந்த ஆயுதங்களை அமெரிக்கா பிரித்தானியா பிரான்ஸ் போன்ற நாடுகள் வழங்கி வருகிறது. இதுவே ரஷ்யாவின் பின்னடைவுக்கு பெரும் காரணமாக இருப்பதை உணர்ந்த ரஷ்யா, போலந்துக்கு அருகே தனது நடவடிக்கையை அதிகரித்துள்ளது. ஆனால் போலந்து நேட்டோ நாடுகளில் அங்கம் வகிக்கும் ஒரு முக்கிய நாடு. எனவே போலந்தை ரஷ்ய படைகள்
தற்செயலாக தாக்கினால் கூட, பெரும் ஆபத்து உள்ளது. போலந்தில் இருந்து 12KM அப்பால் விழுந்த ஏவுகணைகள். போலந்து நாட்டை குறி தவறி தாக்கி இருந்தால் கூட பெரும் போர் வெடிக்கும் அபாயம் உள்ளது. காரணம் போலந்து நாட்டின் எல்லையில் தான் அமெரிக்க துருப்புகள் முகாமிட்டு தங்கியுள்ளது. அதனை தற்செயலாக ஏவுகணைகள் தாக்கி இருந்தால் பெரும் போர் ஒன்று வெடிக்க வாய்ப்புகள் உள்ளது. உக்கிரைன் போர் நாளுக்கு நாள் பெரும் , அச்சத்தை உண்டாக்கும் விதத்தில் பாதகமான சூழ் நிலைகளை உண்டாக்கிக் கொண்டு செல்கிறது என்பது தான் யதார்த்தமாக உள்ளது