இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார பங்காளித்துவம் தொடர்பில் பயனுள்ள கலந்துரையாடல் இடம்பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்நாட்டு மக்களின் தேவைகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷிங்லா ஆகியோரை நேற்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பிலும் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. |