கோட்டா கோகம போராட்டக்களத்தின் முக்கியச் செயற்பாட்டாளரான சமூக செயற்பாட்டாளர் 'ரட்டா' எனப்படும் ரதிந்து சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ரட்டாவின் கைது தொடர்பில் பேஸ்புக் பதிவொன்றுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நக்கலாக பின்னூட்டம் செய்துள்ளார். ''ரட்டாவின் கழுத்தை நெரித்தார்களா என்று தெரியவில்லையே'' என சனத் நிஷாந்த பின்னூட்டம் செய்துள்ள நிலையில், அவரது இந்த நக்கலால் போராட்டக்காரர்கள் பலரும் ஆத்திரமடைந்துள்ளனர். |