
உக்ரைனின் சபோரிஜியா பகுதியில் அமைந்துள்ள மகப்பேற்று வைத்தியசாலை மீது காட்டுமிராண்டித்தனமாக ரஷ்ய படைகள் ரொக்கட் தாக்குதலை மேற்கொன்டுள்ளனர். இதன்போது மகப்பேற்று நடைபெற்று ஒரு சில நிமிடங்களில்
இந்த கொடூர தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இதன்போது கடும் காயங்களுக்கு மத்தியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த தயாயும் வைத்தியர் ஒருவரும் மீட்கப்பட்டுள்ளதுடன் குழந்தை உயிரிழந்துள்ளது. இத்தாக்குதலுக்கு கடும் கண்டனத்தினை தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி, ரஷ்யா கடந்த ஒன்பது மாதங்களாக சாதிக்க முடியாதததை அப்பாவி பொதுமக்கள் மீது மேற்கொள்வதாகவும் இதற்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.