.jpg) தேசிய ரீதியிலான, பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப் போட்டி நேற்று காலை கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவனான சுமன் கீரன் என்ற மாணவன் தோற்றி முதலாவது இடத்தினை பெற்று, வரலாற்றில் முதன் முறையாக தேசியமட்டத்தில் சாதனை படைத்துள்ளார். |