![]() உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு நேற்று மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தில் சிறீலங்கா பொதுஜன பெரமுன 17 உள்ளுராட்சி மன்றங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும், கண்டியில் இரண்டு சுயேட்சைக் குழுக்களும், பண்டாரவளை மாநகர சபைக்காக ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என அவர் கூறியுள்ளார். |