இந்த தகவலை பிபிசியின் முன்னாள் செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசன் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட இராணுவபிரதானி சவேந்திர சில்வா உட்பட்டவர்களுக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிப்பது குறித்த விவாதம் இன்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிலையிலேயே இந்த ஆவணத்தை லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அனுப்பிவைத்துள்ளது என பிரான்சிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக போராடும் அதேவேளை மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்துள்ள இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை மறு ஆய்விற்கு உட்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என அந்த ஆவணத்தில் இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. காணாமல்போனவர்கள் அலுவலகம் காணாமல்போனவர்களின் உறவுகளிற்கு உரிய ஆவணங்கள் கிடைப்பதற்கு உதவுகின்றது எனவும் இலங்கை தூதரகம் தனது ஆவணத்தில் தெரிவித்துள்ளது என பிரான்சிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார். காணாமல்போனவர்கள் அலுவலகம் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது காணாமல்போனவர்கள் அலுவலகம் 16 பேர் உயிருடன் இருப்பதையும் மூவர் உயிரிழந்துள்ளதையும் கண்டுபிடித்துள்ளது எனவும் பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது எனவும் பிரான்சிஸ் ஹரிசன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவில் மனித புதைகுழி அகழ்வின் போது காணாமல்போனவர்கள் அலுவலகம் கண்காணிப்பாளராகவும் தீவிர ஆர்வத்துடனும் பங்குகொண்டது எனவும் இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. |