புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2024

முகப்புத்தகத்தை வைத்து எம்.பி பதவியை சீரழிக்கின்றார் அர்ச்சுனா : கடுமையாக சாடிய சகாதேவன்

www.pungudutivuswiss.com
யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா
சஜித் பிரமேதாசவிற்கு பின்னால் ஒளிய முற்பட்டு தோல்வியடைந்த
நிலையில் தற்போது ஜே.வி.பியிற்கு பின்னாள் ஒளிய முயற்சித்துக்கொண்டிருக்கின்றார் என பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ் ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிகாரிகளை நோக்கி கேள்விகளை எழுப்பவதற்கு முன் அவர் தன்னை நோக்கி கேள்விகளை கேட்டுகொள்ள வேண்டும்.

முகப்புத்தகத்தில் வரும் கருத்துக்களை வைத்துகொண்டு அவர் தன்னை பெரிய ஆளாக நினைத்துகொண்டிருக்கின்றார், அவருடைய பதவி ஊழலுக்காக அவர் கொடுத்த குரலுக்கானது அதனை அவர் துஷ்பிரயோகம் செய்து வருகின்றார்.

சிங்கள ஊடகங்களுக்கு ஒரு கதையும் தமிழ் ஊடகங்களுக்கு ஒரு கதையும் அவர் சொல்லி மக்களிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி குழப்பத்தின் பிரதிநிதியாக இருக்கின்றாரே தவிர அவர் ஒரு மக்களின் பிரதிநிதி கிடையாது” என அவர் தெரிவித்துள்ளார்

ad

ad