புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2025

சுண்ணக்கல் கடத்தல்:கறுப்பு ஆடுகள் எவை?

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த 14வருடங்களாக சுண்ணக்கல்
கடத்தப்பட்டமை தொடர்பில் அரசியல்வாதிகள் மற்றும்
கனியவளத்திணைக்கள பின்னணிகள் பற்றி பேசப்படுகின்றது.
தென்மராட்சியில் சுண்ணக்கல்லுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனங்கள் தொடர்பில் கனிய வள திணைக்களத்தின் அறிக்கை பெறப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வோம் என காவல்துறை தெரிவித்துவருகின்றது.
சாவகச்சேரி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனால் சோதனையிடப்பட்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அதற்குரிய ஆவணங்கள், அறிக்கைகள் அனைத்தும் கனிய வளங்கள் திணைக்களத்திடம் பெற்றுக் கொண்டு விரைவில் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வோம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தடைகளை தாண்டி மூடப்பட்ட வாகனங்களில் சுண்ணக்கல் கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் கனியவளத்திணைக்களத்திடையே சந்தேகங்கள் எழுந்துள்ளன.
சர்ச்சைக்குரிய முருகைக்கற்கள் அகற்றப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் கோடிக்கணக்கில் ஊழல்கள் நடந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

ad

ad