புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2025

கனடாவில் நடந்த "ஆபரேஷன் கமலா"! மோடியை சீண்டினார் வீழ்ந்தார்! ட்ரூடோ ராஜினாமாவிற்கு இந்தியாவும் காரணம்?

www.pungudutivuswiss.com
ஓட்டவா: இந்திய மத்திய அரசுடன் மோதல் போக்கை
கடைபிடித்து வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமாவிற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒரு காரணம்.. அவர் இந்தியாவிற்கு எதிராக காலிஸ்தானியர்களை தூண்டிவிட்டதும் என்கிறார்கள்.

ட்ரூடோவின் ராஜினாமாவை தற்போது பாஜக ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இது கிட்டத்தட்ட கனடாவில் நடந்த ஆபரேஷன் கமலா என்று பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவை சீண்டினார்.. குறிப்பாக மோடியை சீண்டினார்.. வீழ்ந்துவிட்டார் என்று ட்ரூடோவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்தியாவுடன் ஐஸ்டின் ட்ரூடோ மோதிய நிலையில்.. தற்போது அவரின் பதவிக்கே அது சிக்கலாகி உள்ளது. கனடாவில் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி இருந்தார். அவர் வைத்துள்ள புகார்கள் ஒவ்வொன்றாக பின்வருமாறு, நிஜ்ஜார் மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே "நம்பகமான" தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறி உள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் இந்த விவகாரத்தை எழுப்பினார் என்றும் கூறி உள்ளார். இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் உள்ளன.

கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்று கூறி இருந்தார். காலிஸ்தானியர்கள்: கனடாவில் இருக்கும் காலிஸ்தானி வாக்கு வங்கியை குறி வைத்து ட்ரூடோ இப்படி செய்ததாக கூறப்பட்டது. ஆனால் கனடாவில் இருக்கும் மற்ற மக்கள் இதை விரும்பவில்லை. நாட்டின் பொருளாதார பிரச்னையை சரி செய்யாமல்.. இவர் தேவையில்லாத அரசியல் செய்கிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

அவர் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தது அவருக்கே உட்கட்சி ரீதியாக பிரச்சனையாக மாறியது. சீன் கேசி மற்றும் கென் மெக்டொனால்ட் உட்பட பல உயர்மட்ட லிபரல் கட்சி எம்.பி.க்கள், ட்ரூடோவின் தலைமையின் மீதான அதிருப்தியை நேரிடியாக வெளிப்படுத்தினர். லிபரல் கட்சி அவரின் சொந்த கட்சி. அவர்கள் நேரடியாக ட்ரூடோ மீது வெளிப்படையாக விமர்சனங்களை வைத்தனர். 20க்கும் மேற்பட்ட லிபரல் எம்.பி.க்கள் அவர் பதவி விலகக் கோரி உறுதிமொழியில் கையெழுத்திட்டுது எதிர்ப்பை பதிவு செய்தனர். நாட்டின் நிதி பிரச்சனைகளை ட்ரூடோ கவனிக்க தவறிவிட்டார் என்று அவர் மீது நேரடியாக புகார்கள் வைக்கப்பட்டன.

இப்படிப்பட்ட நிலையில்தான் கனடாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அங்கே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகி உள்ளார். உட்கட்சி பிரச்சனை, மசோதாக்களை நிறைவேற்ற முடியாதது, சில நிதி பிரச்சனைகள் காரணமாக ஜஸ்டின் பதவி விலகி உள்ளார். ஏற்கனவே நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கே நிதி நிர்வாகம் தொடங்கி கடன் பிரச்சனை வரை பல விஷயங்கள் தீவிரம் அடைந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஜஸ்டின் ராஜினாமா செய்துள்ளார்.

ad

ad