புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2025

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்திற்குள் மோசடிகளும், குற்றங்களும் மறைக்கப்படுகிறது! [Thursday 2025-01-09 05:00]

www.pungudutivuswiss.com


அரிசி மாபியாக்களை இல்லாதொழிப்பதை மறந்து விட்டு வாகனங்களின் உதிரிபாகங்களை அகற்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.  கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம்  என்று குறிப்பிட்டுக் கொண்டு பெரும் மோசடிகளும், குற்றங்களும் மறைக்கப்படுகிறது என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

அரிசி மாபியாக்களை இல்லாதொழிப்பதை மறந்து விட்டு வாகனங்களின் உதிரிபாகங்களை அகற்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு பெரும் மோசடிகளும், குற்றங்களும் மறைக்கப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் புதன்கிழமை ( நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்கு விதி மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் முறைமை மாற்றம் பிரதான பேசுபொருளாக காணப்பட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் முறைமை மாற்றம் பற்றி பேசின. சிறந்த மாற்றத்தை தேசிய மக்கள் சக்திளால் ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை கொண்டு மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.

வாழ்க்கைச் செலவு குறைப்பு, நாணய நிதியத்துடனான செயற்திட்ட மறுசீரமைப்பு, ஊழல் மோசடி, சிறந்த அரச நிர்வாகம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்த 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதா என்பதை ஆராய வேண்டும்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தை மக்கள் மத்தியில் முன்னெடுத்தது. எரிபொருள், பருப்பு, அரிசி, உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பகுதியளவில் குறைக்கப்பட்டன. மக்களின் வாழ்க்கைச் செலவுகளும் குறைக்கப்பட்டன.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வின் 100 நாள் நிர்வாகத்தில் அரிசி, தேங்காய், ஆகிய உணவு பொருட்களின் விலைகள் அமெரிக்க டொலருக்கு நிகரானதாக காணப்படுகிறது.

எதிர்க்கட்சி பதவிக்கான பொறுப்பை நாங்கள் சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளோம். கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயற்படும் போது நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பல முறை எடுத்துரைத்தோம்.

வங்குரோத்து நிலைமையை தடுக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு வலியுறுத்தினோம் .இருப்பினும் அரசாங்கம் எமது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை. இறுதியில் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இடைக்கால அரசாங்கத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டம் குறித்து பல யோசனைகளை முன்வைத்தோம்.

எமது கருத்துக்கு மதிப்பளிக்காமல் அரசாங்கம் யோசனைகளை ஏற்றது. அதனால் இன்று நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவே எதிர்க்கட்சிக்கான பதவியை நாங்கள் முறையாக செயற்படுத்தி அரசாங்கத்தின் தவறை சுட்டிக்காட்டியுள்ளோம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலின் போது அரிசி மாபியாக்களை முடிவுக்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டார். ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் முடிவடைந்துள்ள போதும் மாபியாக்களை முடிவுக்கு கொண்டுவரவில்லை. குறைந்தபட்சம் அரிசி மாபியாக்களை இல்லாதொழிக்கும் திட்டங்களை கூட முன்வைக்கவில்லை.

உலக உணவு பாதுகாப்புத் திட்டத்தின் அறிக்கைக்கு அமைய இலங்கையின் உணவு பாதுகாப்பு கடந்த ஆறு மாத காலப்பகுதியில் மாத்திரம் 7 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.

பெருந்தோட்ட மக்கள் தமது மாத வருமானத்தில் 75 சதவீதத்தை உணவு பொருட்களுக்காகவே செலவழிக்கிறார்கள். ஆகவே அரிசி விலையை குறைத்தால் மந்த போசணை வீதம், வாழ்க்கைச் செலவும் குறைவடையும்.

பிரதான அரிசி உற்பத்தியாளர்கள், விநியோகஸ்த்தர்கள் மற்றும் வங்கிக் கட்டமைப்பின் முக்கிய தரப்பினர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து அரிசி மாபியா செயற்படுகிறது. பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் நாளொன்றுக்கு 40 இலட்சம் ரூபா இலாபமடைகிறார்கள். இந்த இலாபத்தின் குறைந்தப்பட்ச பயன் கூட விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் கிடைப்பதில்லை.

அரிசி மாபியாக்களை இல்லாதொழிப்பதை மறந்து விட்டு வாகனங்களின் உதிரி பாகங்களை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வீதியில் உள்ள பெட்டிக்கடைகள் அகற்றப்படுகிறது. க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு பெரும் மோசடிகளும், குற்றங்களும் மறைக்கப்படுகிறது. முறைமை மாற்றத்தில் மக்கள் இதனை எதிர்பார்க்கவில்லை என்றார்.

ad

ad