வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் 11ஆம் தரமாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.
தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள மொழி இலக்கிய வினாத்தாள் சமூக ஊடகங்கள் ஊடாக வெளியாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண கல்வி செயலாளரின் பணிப்புரைக்கமையவே 2024 ஆம் ஆண்டு 11 ஆம் தர இறுதிப் பரீட்சை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.