புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2025

போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் குறுக்கிட்ட ட்ரம்ப்: ஜெலென்ஸ்கியுடன் வெடித்த வாக்குவாதம்

www.pungudutivuswiss.com
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை ஓவலில் உள்ள
வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்த உக்ரேனிய ஜனாதிபதி
ஜெலென்ஸ்கி, போர் நிறுத்தம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், ரஷ்யாவுடன் போரில் ஈடுபடுவதற்கு உங்கள் நாட்டில் வீரர்கள் இல்லை என கூறியுள்ளார்.

இதன் காரணமாக கோபமடைந்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வீரர்கள் இருக்கின்றார்களா என்பதனை தங்கள் நாட்டிற்கு வந்து பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.

கோபமடைந்த ட்ரம்ப்
இதன்போது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், இடையில் குறுக்கிட்டு பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அவ்விடத்தில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் குறுக்கிட்ட ட்ரம்ப்: ஜெலென்ஸ்கியுடன் வெடித்த வாக்குவாதம் | Zelenskyy Met Trump Argument In Ceasefire Meeting

ஜெலென்ஸ்கியை நோக்கி கோபமாக பேசிய ட்ரம்ப், "நீங்கள் எங்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். அத்துடன் நீங்கள் ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது நாங்கள் இதிலிருந்து வெளியேறிவிடுவோம்.

அதுமாத்திரமன்றி, உங்களிடம் போதுமான துருப்புக்கள் இல்லை, நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்புகிறீர்களா இல்லையா என்பதை எங்களிடம் கூற முடியாது.


அவமரியாதை

நீங்கள் எங்கள் நாட்டிற்கு அவமரியாதையை ஏற்படுத்துகின்றீர்கள், எனக்கு தெரியும் உங்களால் போரில் வெற்றி பெற முடியாது என்று. எனவே, நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும்.

போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் குறுக்கிட்ட ட்ரம்ப்: ஜெலென்ஸ்கியுடன் வெடித்த வாக்குவாதம் | Zelenskyy Met Trump Argument In Ceasefire Meeting


ஆனால் இது போன்று ஒப்பந்தம் செய்வது மிகவும் கடினமானது, எங்கள் ஆயுதங்கள் இல்லையென்றால் இந்த போர் எப்போதோ முடிந்து இருக்கும்.


நீங்கள் தனியாக செயற்பட்டதில்லை, ஆனால் நீங்கள், முட்டாள் ஜனாதிபதியே எங்களிடம் 350 பில்லியனை பெற்றுள்ளீர்கள், அத்துடன் எங்கள் ஆயுத தளபாடங்கள் இல்லையென்றால் இந்த போர் 2 வாரங்களில் முடிந்திருக்கும்” என கடுமையாக உரையாடியுள்ளார்.

ad

ad