புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2025

பல்கலைக்கழக நடைபவனியை முடக்கிய பொலிஸ்! [Tuesday 2025-04-22 05:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பழைய மாணவர் சங்கம் முன்னெடுக்கும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பழைய மாணவர் சங்கம் முன்னெடுக்கும்"வேரிலிருந்து விழுது வரை" ஒன்றிணையும் பொன் விழா சங்கமத்தை முன்னிட்டு நடைபவனி திங்கட்கிழமை (21) நடைபெற்றது

உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணி மற்றும் நடைபவனி மேற்கொள்வதற்கு தடை விதித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து தேர்தல் சார்ந்த நடைபவனி அல்ல என பொலிஸாருக்கு ஏற்பாட்டாளர்கள் தெளிவுபடுத்திய நிலையில் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள் நடைபவனியில் பங்கேற்க முடியாது என்ற நிபந்தனையுடன் நடைபவனி இடம்பெற்றது.

பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கம் முன்பாக ஆரம்பித்த நடைபவனி பிரதான நுழைவாயில் ஊடாக சென்று பல்கலைக்கழக விஞ்ஞான பீட நுழைவாயிலுடாக மீண்டும் கலைப்பீடத்தை வந்தடைந்தது.

நடைபவனியில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், பல்கலைக்கழக பழைய மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ad

ad