![]() ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நாளை (26) நள்ளிரவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன |
-
25 ஜூலை, 2024
நாளை நள்ளிரவில் வெளியாகிறது தேர்தல் அறிவிப்பு!
இன்று பதவி விலகுகிறார் விஜேதாச ராஜபக்ஷ?
![]() நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்காக அமைச்சு பதவியை இராஜிநாமா செய்வது தொடர்பிலேயே அவரது விசேட அறிவித்தலில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது |
30 நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு
![]() அரசியல் தலையீட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுமார் 30 நிகழ்வுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் ஆணைக்குழுவின் உத்தரவால் நிறுத்தப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். |
அவசரமாக அமைச்சரவையைக் கூட்டினார் ஜனாதிபதி- கொழும்பு அரசியலில் பரபரப்பு
![]() ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். தற்போது இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது |
சனிக்கிழமைக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு!
![]() 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை சனிக்கிழமைக்கு முன்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது. வியாழ நடைபெறவிருக்கும் கூட்டம் ஆணைக்குழுவின் வழக்கமான கூட்டமே தவிர தேர்தல் தேதி குறித்து விவாதிக்கும் நோக்கம் இல்லை எனவும் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பிற்கான வர்த்தமானி அறிவித்தல் வார இறுதிக்கு முன்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது |
தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக செயற்பட இடைக்காலத் தடை! - உயர்நீதிமன்றம் அதிரடி.
![]() தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. |
24 ஜூலை, 2024
மருத்துவர் அர்ச்சுனா பேராதனை வைத்தியசாலை வைத்திய அதிகாரியாக தரமிறக்கம்
![]() யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்த மருத்துவர் இராமநாதன் அர்சுனா பேராதனை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார். |
சஜித்தின் புதிய கூட்டணி - ஓகஸ்ட் 8 இல் கைச்சாத்து
![]() அடுத்த தேர்தல்களை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய ஐக்கிய மக்கள் கூட்டணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி கைச்சாத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார் |
மொட்டு கட்சியின் 12 மாவட்டத் தலைவர்கள் ரணில் வசம்
![]() ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தினால் அதற்கு எதிராக செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்றுமுன்தினம் இரவு கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த மொட்டுக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பெரும்பான்மையினரின் கருத்துக்கு எதிராக சென்று கட்சி வேறு வேட்பாளரை நியமித்தால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அங்கு அவர்கள் முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறக்குறைய 75 மொட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அமைப்பு ரீதியான செயற்பாடுகளை மாவட்ட மட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. |
23 ஜூலை, 2024
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு உடன்படிக்கையின் 9 அம்சங்கள்
தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகிய இரு தரப்பினரின் இணைவில், உருவாக்கப்படும் "தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" உடன்படிக்கையில் 9 அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது |
22 ஜூலை, 2024
சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் - 15 பேர் கொண்ட குழு நியமனம்
![]() சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. |
முன்னணியின் எம்.பிக்களுக்கும் 6 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு!
![]() தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அபிவிருத்தி நிதியாக சுமார் 6 கோடி ரூபாவுக்கான ஒதுக்கீடு யாழ். மாவட்ட செயலகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. |
வவுனியாவில் வாடகை வீட்டில் பாலியல் விடுதி!
![]() வாடகை வீடொன்றில் நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் விடுதியொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் நான்கு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் |
செப்ரெம்பர் 21இல் ஜனாதிபதி தேர்தல்?
![]() ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு செப்டம்பர் 21ம் திகதி நடைபெறலாம் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், உறுதியான திகதி இந்த வாரம் வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது |
கிளப் வசந்த கொலைக்கு உதவிய இளம் யுவதி கைது!
![]() கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான யுவதி இன்று கடுவெல பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன்போது , குறித்த யுவதியை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் அதுருகிரிய பிரதேசத்தில் வைத்து, கிளப் வசந்தவின் கொலைக்கு உதவியவர் என குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் |
நாளை முதல் போராட்டத்தில் குதிக்கும் ஆசிரியர்கள்!
![]() சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்கள் திங்கட்கிழமை முதல் இரு வாரங்களுக்கு சட்டப்படி கடமையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இக்காலப்பகுதியில் சாதகமான பதிலை வழங்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும் தொழிற்சங்கத்தினர் கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளனர் |
குத்துவிளக்கு கூட்டணி தலைவர்கள் சந்திப்பு
![]() ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படவுள்ள நிலையில், ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது |
வழக்கினை கைவாங்குவதாக முதல் நாளிலேயே அறிவித்து விட்டோம்!
![]() இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிர்வாகத் தெரிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் வழக்காளி கோரிய நிவாரணத்தினை வழங்கி வழக்கினை கைவாங்குவதாக வழக்கு விசாரணைக்கு எடுத்த முதல் நாளிலேயே அறிவித்து விட்டோம் என்று அக்கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். |
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு!
![]() தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது |
அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
க்க விமான நிலையத்தில் கைது! [Sunday 2024-07-21 17:00] |
![]() தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. |