ஊழல் குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்: சோனியா | ||||
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 04:56.55 PM GMT +05:30 ] | ||||
இன்று மாலை ஐ.மு கூட்டணி அரசு இரண்டாவது முறையாகப் பதவிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி நடைபெற்ற புதுடெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் "ஐ.மு கூட்டணி அரசு: நாட்டு மக்களுக்கான அறிக்கை" என்பதை வெளியிட்டுப் பேசும் போது சோனியா இதைத் தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவில் மட்டும் இல்லாமல் செயலளவிலும் கண்டிப்புடன் எடுக்கப்படும் என்றார் அவர். மேலும் அவர் கூறியதாவது: 1. நேர்மை, நாணயம், வெளிப்படைத்தன்மை, கடமை, பொறுப்பு - இவையே எங்கள் அரசாட்சியின் முக்கிய அம்சங்கள். 2. பொறுப்புள்ள, செயல்தன்மையுள்ள அரசையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டின. 3. மாபெரும் பொருளாதார வளர்ச்சி, வாங்கும் சக்திக்கேற்ப அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுக்குள் இருத்தல் இவற்றுக்கே ஐ.மு கூட்டணி அரசு முன்னுரிமை அளிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: ஐ.மு.கூட்டணி அரசு 7 வருடங்கள் நிலையான ஆட்சியைக் கொடுத்துள்ளது. சமூக முன்னேற்றம், மத நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கொடுத்துள்ளது. உணவு பெறும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மிகப் பெரிய சவால. பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராட அனைவரும் ஒருங்கிணைவது அவசியம் என்று கருத்து தெரிவித்தார். |
-
23 மே, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக