M
(அந்தப் பத்திரிக்கை தயாநிதியின் மாமனார் குடும்பத்துடையது).தனக்குத் தலைமைப் பதவி கிடைக்காது, உருப்படியாக இருந்த தொ தொ மந்திரிப் பதவியும் கையைவிட்டுப் போனதால் ஆத்திரம்!அதனால் கட்சி உருப்படாது என கூறியிருப்பார்! பிறகு தயாளு கோஷ்டியை ஏமாற்ற சிவசங்கரன் வழியாக கல் டிவி துவக்க 25 கோடியை முதல் கடனாக அளித்த்ததும் மாறனே! பிறகு ராசாவை மாட்டிவிட அதே சிவா வழியாக(S.Tel)தனக்கும் ஸ்பெக்ட்ரம் வேண்டும் என வழக்குப் போட்டு, ஊழல் வெளிவரக் காரணமாய் இருந்ததும் வேறு யாரும் அல்ல!இப்போது கட்சி அழியப்போகிறது என்பதால் இப்போது ஜெயாவிடம் சரணமடைய தனது உறவினர் பத்திரிக்கையை பயன்படுத்துகிராரோ என்ற சந்தேகம் வருகிறது!( NB . ஜெயா பதவியேறபை சன் டிவி நேரடி ஒளிபரப்பு செய்தது).பதவிக்காகவும் பணத்துக்காகவும் எதுவும் செய்யும் பிறவி!
By மணி
5/23/2011 2:31:00 P
M
5/23/2011 2:31:00 P
திமுக தோல்வி அடையும் என்பதை முன்கூட்டியே கணித்த தயாநிதி மாறன்: விக்கிலீக்ஸ்First Published : 23 May 2011 10:53:05 AM IST
Last Updated : 23 May 2011 11:11:33 AM IST
புதுதில்லி, மே.23: சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி, 2ஜி வழக்கில் திமுக எம்பி கனிமொழி கைது என திமுகவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இதெல்லாம் நடக்கும் என அக்கட்சியின் மத்திய அமைச்சர் ஒருவர் முன்கூட்டியே கணித்துள்ளார்.
இதுகுறித்த அமெரிக்க தூதரகத்தின் கேபிளை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
திமுக தோல்வி அடையும் என்பதை 2008-ம் ஆண்டிலேயே மத்திய அமைச்சரும், கருணாநிதியின் பேரனுமான தயாநிதி மாறன் கணித்துள்ளார்.
திமுக மீது படிந்துள்ள ஊழல் கறையை அகற்றாவிட்டால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் மாறன் தெரிவித்துள்ளார்.
மாறன் இவ்வாறு கூறியதாக அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அந்நாட்டின் தூதரக அதிகாரி டேவிட் ஹூப்பர் தகவல் அளித்துள்ளார்.
அதிகாரத்துக்கு வருபவர்கள் கவனத்தை இழந்து பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் என தயாநிதி மாறன், டேவிட் ஹூப்பரிடம் தெரிவித்துள்ளார்.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க கேபிளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அமெரிக்க தூதரகத்தின் கேபிளை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
திமுக தோல்வி அடையும் என்பதை 2008-ம் ஆண்டிலேயே மத்திய அமைச்சரும், கருணாநிதியின் பேரனுமான தயாநிதி மாறன் கணித்துள்ளார்.
திமுக மீது படிந்துள்ள ஊழல் கறையை அகற்றாவிட்டால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் மாறன் தெரிவித்துள்ளார்.
மாறன் இவ்வாறு கூறியதாக அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அந்நாட்டின் தூதரக அதிகாரி டேவிட் ஹூப்பர் தகவல் அளித்துள்ளார்.
அதிகாரத்துக்கு வருபவர்கள் கவனத்தை இழந்து பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் என தயாநிதி மாறன், டேவிட் ஹூப்பரிடம் தெரிவித்துள்ளார்.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க கேபிளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரும்புலிகளின் பாணியில் பாக். விமானத் தளம் மீது தாக்குதல்!
கரும்புலிகளின் பாணியில் 15 தீவிரவாதிகள் வரை விமானப் படைத் தளத்துக்குள் ஊடுருவிச் சென்றனர்.
பின் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்தனர். மறைந்து இருந்து தாக்குதல்களை ஆரம்பித்தனர். அமெரிக்காவின் வான்வழிக் கண்காணிப்பு விமானம் ஒன்றை அழித்தனர்.
ஏவுகணைகளை சுட்டனர். பதில் தாக்குதல் நடத்த அனுப்பப்பட்டு இருந்த கமாண்டோக்களோடு சண்டையிட்டனர்.
இவ்விமான தளம் விமானப் படையினர், கடல் படையினர் ஆகியோரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தீவிரவாதிகளின் தாக்குதல் சுமார் எட்டு மணித்தியாலங்கள் வரை தாக்குதல் நீடித்து இருக்கின்றது. இத்தாக்குதலில் கடல் படையினர் ஐவர் கொல்லப்பட்டமையுடன் கடல் படையினர் ஒன்பது பேர் காயப்பட்டு உள்ளனர்.
விமானப் படைத் தளத்தில் இருந்த கட்டிடங்களில் ஒன்றையேனும் தீவிரவாதிகள் கைப்பற்றி இருக்கின்றனர். ஊடகங்களுக்கு கிடைத்து இருக்கும் தகவல்களின்படி ஏழு குண்டுவெடிப்புக்கள் நடததப்பட்டு இருக்கின்றன, பி - சி 03 ஓரியன் விமாங்கள் இரண்டு முற்றாக அழிக்கப்பட்டு இருக்கின்றன.
ஆயினும் படைத் தரப்புக்கு ஏற்பட்ட மொத்த இழப்புக்கள் சரியாக தெரியவில்லை.
காயப்பட்ட படையினரில் சிலர் அம்புலன்ஸ்கள் மூலமாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஏராளமான அம்புலன்ஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றன.
அல் குவைதா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் படுகொலை செய்யப்பட்டமைக்கு பழி வாங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் போராளிகள் திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்த்து இருக்கவில்லை என்றும் அமெரிக்காவினுடனான பாகிஸ்தானின் நட்புக்கு இது நல்ல பாடமாக இருக்கும் என்றும் தலிபான் இயக்கப் பேச்சாளர் தெரிவித்து உள்ளார்.
இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று பாகிஸ்தானிய அரசு அற்வித்து உள்ளது. தீவிரவாதிகளில் ஆறு பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர், நால்வர் கைதிகளாக பிடிக்கப்பட்டு இருக்கின்றனர் என்று உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை மரணம்
தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் காலமானார்.அவருக்கு வயது 60. 16.05.2011 அன்று அமைச்சராக பதவியேற்ற மரியம் பிச்சை, சென்னையில் இன்று எம்எல்ஏவாக பதவியேற்க இருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருச்சியில் இன்று காலை முத்துரையர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு சென்னை திரும்பினார். திருச்சி பெரம்பலூர் மெயின்ரோடு, பாடாலூர் அருகே அவரது கார் வந்துகொண்டிருந்தது. அப்போது அவரது கார் முன்னால் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் மரியம் பிச்சை மரணம் அடைந்தார்.
திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு அவர்களை எதிர்த்து போட்டியிட்டு 7,007 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மூன்று முறையாக எம்எல்ஏவுக்கு போட்டியிட்ட மரியம் பிச்சை, கடந்த சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏவாக வெற்றி பெற்று, அமைச்சராகவும் ஆனவர்.
பி.ஏ., வரலாறு பட்டதாரியான மரியம் பிச்சை திருச்சி சங்கிலியாண்டவுரத்தைச் சேர்ந்தவர். திரைப்பட வினியோகஸ்தராக இருந்த மரியம் பிச்சை திரையரங்கையும் நடத்தி வந்தார். திருச்சி மாநகர அதிமுக அமைப்பு செயலாளராக இருந்து வந்தவர். திருச்சி 27வது வார்டு கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். மறைந்த மரியம் பிச்சைக்கு ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.