.
பார்முலா 1 கார் பந்தயம்: ஜெர்மனி வீரர் வெட்டல் சாம்பியன்-இளம் வயதில் ஹாட்ரிக் சாதனை

இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் 20 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதன் கடைசி சுற்றான பிரேசில் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார்பந்தயம் சாபாவ்லோ நகரில் நடந்தது.
இதில் இங்கிலாந்து வீரர் ஜென்சன் பட்டன் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 45 நிமிடம் 22.656 வினாடியில் கடந்தார்.
முன்னணி வீரரான ஜெர்மனியை சேர்ந்த செபாஸ்டியன் வெட்டல் 6-வது இடத்தை பிடித்தார்.
20 சுற்றுகளின் முடிவில் வெட்டல் 281 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். பார்முலா1 கார் பந்தயத்தில் அவர் தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்தார். அவர் 2011-ம் ஆண்டும், 2010-ம் ஆண்டும் பார்முலா1 கார் பந்தய போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார்.
மேலும் தொடர்ந்து 3-வது முறையாக பார்முலா1 கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் பெற்ற இளம் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
ரெட்புல் அணி வீரரான வெட்டல் இந்த ஆண்டு பார்முலா1 போட்டியில் 5 பந்தயங்களில் வெற்றி பெற்றார்.
பெராரி அணியை சேர்ந்த பெர்னாண்டோ அலோன்சா (ஸ்பெயின்) 278 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தார். அவர் 3 புள்ளிகளில் சாம்பியன் பட்டத்தை இழந்தார். நேற்றைய பந்தயத்தில் அலோன்சா வெற்றி பெற்று இருந்தால் சாம்பியன் பட்டம் பெற்று இருப்பார். ஆனால் அவர் 2-வது இடத்தையே பிடித்தார்.
பின்லாந்து வீரர் ரெய்க் கோனன 207 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தார்.