மாவீரர் நாள் : திருமாவளவன் உரையாற்றுகிறார்
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் அறிவிக்கப்பட்ட நவம்பர் -27 மாவீரர் நாள் நிகழ்வுகளை, ஒவ்வோர் ஆண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.
நாளை ( 27.11.2012) செவ்வாய் மாலை 4 மணி அளவில் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான தமிழ்மண் திடலில் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடங்குகின்றன.
மாலை 5 மணிக்கு திருமாவளவன் ஈகச்சுடரேற்றி மாவீரர் நாள் உரையாற்றுகிறார்.