முத்துக்குமார் உள்ளிட்ட ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்த 22 ஈகியர்கள் நினைவாக 22 அடி தூண் அமைத்து ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது (படங்கள்)
ஈழத் தமிழர்களின் உயிர் காக்க தன் இன்னுயிர் ஈந்த முத்துக் குமாருக்கு , தமிழர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி தங்கள் வீரவணக்கத்தை செலுத்தினர்.
காலை முதலே ஒவ்வொரு இயக்கங்களும் கட்சிகளும் , தமிழ் உணர்வாளர்களும் , பொது மக்களும் ஈகி முத்துக்குமாருக்கு மலர் அஞ்சலியோடு தங்கள் வீர வணக்கத்தை செலுத்தினர். முத்துகுமாரின் நினைவு நாளான இன்று தமிழர்களின் எழுச்சி நாளாக அனுசரிக்கப்பட்டது , முதல் முறையாக பலரும் கட்சி இயக்கம் வேறுபாடுகள் களைந்து தமிழ் நாடு பொறிக்கப்பட்ட கொடியை தங்கள் சட்டையில் குத்தி வந்து வீரவணக்கத்தை செலுத்தினர். இது இனியும் தொடரும் . தமிழர்கள் இந்த நாளில் ஒன்றாக இணைந்து தமிழர் உரிமைகளை வென்றெடுக்க உறுதி பூண்டனர். வென்றாக வேண்டும் தமிழ். ஒன்றாக வேண்டும் தமிழர் .

இந்நிகழ்வின் போது , வீரவணக்கம் செலுத்த வந்த பெண்களை அவர்கள் அனுமதி இன்றி காவல் துறை படம் பிடித்தனர் . இதை பார்த்த பெண்கள் சீனம் கொண்டு காவல்துறையை கண்டித்தனர் . பின்னர் தமிழ் உணர்வாளர்கள் பலரும் கூடி காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்தனர். அதனால் சிறுது நேரம் காவல் துறைக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டது . முடிவில் அந்த பதிவுகளை நீக்குவதாக ஆய்வாளர் உறுதி அளித்ததை தொடர்ந்து பெண்களும் , மற்ற தோழர்களும் களைந்து சென்றனர் . இதனால் சிறுது நேரம் பதற்றம் நீடித்தது 