""சட்டமன்ற உறுப்பினர் என்ற வகை யில் முதலமைச்சர் ஜெய லலிதாவை சந்தித்தேன். எனது கோரிக்கைகளை கனிவோடு பரிசீலிப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்''’
-கிளிப்பிள்ளை போல இப்படி ஒப்பித்த ஆறு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க் களின் வரிசையில் ஏழாவது எம்.எல்.ஏ.வாக நிற்கிறார் மாஃபா பாண்டியராஜன். நக்கீரன்
""என்னை நம்பி வாக்களித்த மக்களுக்காகவே...''’என்ற பொதுவான ஒரு அறிக்கையை தனது விளக்கமாக அவர் வெளியிட்டிருந்தாலும், ""உள்ளுக்குள் நடந்ததைச் சொல்லுங்களேன்''’ என்றோம் மாஃபா பாண்டியராஜனிடம்.
""உயர்மட்டக் குழு பொறுப்பு தரலைன்னு நான் வெறுப்புல இருக்கேன்னு, அப்ப நக்கீரன் கேட்ட கேள்விக்கு நான் விளக்கம் சொன்னத... அப்ப பெரிய அளவுல எங்க கட்சியில பிரச்சினை ஆக்கினாங்க. இப்பவும் கேள்வி கேட்குறீங்க?'' என்று சிரித்தபடி பழைய விஷயத்தைச் சுட்டிக்காட்டி பேச ஆரம்பித்தார்.
மாஃபா பாண்டியராஜன் : இதுக்கு நான் விரிவாத்தான் பதில் சொல்லணும். அப்ப எனக்கு மேலிடப் பார்வையாளர் பொறுப்பு கொடுத்தாங்க. விருதுநகர் தொகுதியையும் கேப்டன் கொடுத்தாரு. ஆரம்பத்துல பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட மூணு பேருல ஒருத்தனா இருந்தேன். அப்புறம் நிர்வாக பொறுப்புக்களை வைத்திருந்த பத்து பேருல ஒருத்தனா இருந்தேன். அப்புறம் பன்னிரண்டு பேருல ஒருத்தன் ஆனேன். நோட்டீஸ்ல ஏழாவது, எட்டாவது இடத்துல போட்ட என்னை 18, 19-வது இடத்துல போட்டாங்க. மொதல்ல மேடையில உட்கார வச்சாங்க. அப்புறம்... மேடையிலிருந்து இறக்கி முதல் வரிசைல உட்கார வச்சாங்க. அடுத்த பொதுக்குழுவுல ரெண்டாவது வரிசை... என்னுடன் இருப்பவர்களுக்கு பொறுப்பே தர்றதில்ல. என்னைக் குத்திக் குத்திக் கிளறுனாங்க.
கட்சியில் முக்கிய இடத்துக்கு வேறு யாரும் வந்துவிடக் கூடாதுன்னு மூவர் அணி வேலை செஞ்சுகிட்டிருக்கு. என்னோட நிலைமைதான் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் ஆஸ்டினுக்கும். அந்த அளவுக்கு கட்டம் கட்டுறாங்க. இதுல இளங்கோவன்கூட என் விஷயத்துல பெரிசா எதுவும் பண்ணல. சந்திரகுமாரும் பார்த்தசாரதியும்தான் போட்டுக் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. கேப்டனும் இந்த ரெண்டு பேரு சொல்லுறதக் கேட்டு பளிச்னு ஒரு முடிவு எடுத்துடறாரு. பரமக்குடியில ஒரு கட்சி நிகழ்ச்சி, பொறுப்பாளர் ஒருத்தர் என் படத்த பெரிசா போட்டு "அரசியல் விஞ்ஞானியே'ன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டாரு. இதுக்காக எங்கிட்ட ரொம்ப நாள் பேசாம இருந்தாரு கேப்டன்.
நக்கீரன் : அது சரி.. இதற்கு முன் முதல்வரைச் சந்தித்த தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரின் கோரிக்கைகள் அந்தந்த தொகுதிகளில் நிறைவேறி வருகிறதா?
மாஃபா பாண்டியராஜன் : அது எனக்குத் தெரியாது.
நக்கீரன் : வேறு காரணங்கள் எதுவுமில்லையா?
நக்கீரன் : வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட சீட் கேட்டு, அதற்கு அக்கட்சியின் தலைமை சம்மதித்த பிறகே சந்திப்பு நடந்ததாமே?
மாஃபா பாண்டியராஜன் : அதைப் பற்றி பேச வேண்டாமே.
தே.மு.தி.க. குறித்து பேசும் போதெல்லாம் குமுறல்களைக் கொட்டிய மாஃபா பாண்டிய ராஜன், ஜெ.வைச் சந்தித்த பின்னணியை துருவிய போது பதில் சொல்வதையே தவிர்த்தார்.
‘மாஃபா பாண்டியராஜனின் டிமாண்ட்’ குறித்து ஆளும் கட்சி வட்டாரத்தில் விசாரித்த போது, ""நேரில் போய் மாஃபா பாண்டியராஜனிடம் பேச்சு வார்த்தை நடத்தி அ.தி.மு.க. பக்கம் இழுத்தது ஓ.பி.எஸ்.ஸும் நத்தம் விஸ்வநாதனும்தான். அப்போது அவர்களிடம் "பணமெல்லாம் எனக்கு தேவையில்லை... எம்.பி. சீட் தருவீர்களா?'’ என்று கேட்டிருக்கிறார் பாண்டிய ராஜன்.
"வாய்ப்பிருந்தால் பார்க்கலாம்'’என்று சொல்லிவிட்டது தலைமை. மற்றபடி, உத்தரவாதம் எதுவும் தரவில்லை'' என்கிறார்கள்.
இதுபோன்ற தருணங்களில்... "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'’என்ற கவுண்டமணி டயலாக்கை ‘ரிபீட்’ செய்து சிரித்து விட லாம்தானே!
-சி.என்.இராமகிருஷ்ணன்
படங்கள்: ஸ்டாலின் &