
சர்வதேச விசாரணையுடன் வெளிவருகிறது நவிப்பிள்ளையின் அறிக்கை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பாக தயாரித்த அறிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை ஜெனீவா மனித உரிமையாளர் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மூன்று தடவைகள் திருத்தத்துக்குள்ளான இந்த பிரேரணையில் இலங்கைக்கு எதிராகவும் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்ற சரத்தும் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான இந்த பிரேரணை மீது விவாதம் நடத்தப்பட்டு 28ஆம் திகதி பிரேரணை மீது வாக்கெடுப்பு இடம்பெற வுள்ளது. இலங்கைக்கு எதிரான இப்பிரேரணைக்கு அமெரிக்கா பிரிட்டன் அதேபோன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கனவே ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்துள்ளன.
கடந்த வருடம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளித்து 25 நாடுகள் இம்முறையும் இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்குமென அமெரிக்கா தெரிவிக்கின்றது.