ஊழல் வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய தி.மு.க. எம்.பியுமான டி.எம்.செல்வகணபதி உள்பட ஐந்து பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.1995-96ஆம் ஆண்டில் அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. அப்போது, ஜவஹர்யோஜ்கர் யோஜனா வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுடுகாட்டுக்கு கூரை அமைப்பதில் முறைகேடு செய்ததாக செல்வகணபதி, ஆச்சார்யலு, சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, பாரதி ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், செல்வகணபதி உள்பட ஐந்து பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
தற்போது, தி.மு.க.வில் இருக்கும் செல்வகணபதி, அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார்.
தற்போது, தி.மு.க.வில் இருக்கும் செல்வகணபதி, அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார்.