புலனாய்வுப் பிரிவினரால் "தாருக நிலான்" என்னும் நபர் காட்டில் வைத்து சுடப்படுள்ளார்
இதேவேளை அத்துப்பாக்கி புதைக்கப்பட்ட இடத்தில் கைக்குண்டு ஒன்றும் இருந்ததாகவும், துப்பாக்கியை பொலிசாரிடம் கொடுத்துவிட்டு அக் கைக்குண்டு எடுத்து தாருக நிலான் தம்மீது வீச எத்தணித்ததாகவும் பொலிசார் கூறி அவரை சரமாரியாக சுட்டுக்கொன்றுள்ளார்கள். இது மிகவும் நன்றாக திட்டமிடப்பட்டு நடைபெற்றுள்ளது. தாருக நிலான் புதைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கொடுத்ததும், அவரை காட்டில் வைத்து அப்படியே போட்டுத்தள்ளவே சிங்கள சி.ஐ.டி பிரிவினர் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார்கள். அங்கே கைக் குண்டு ஒன்று இருந்ததாகவும் அதனை அவர் எடுத்து தம்மேல் வீச முற்பட்டதாகவும், பொலிசார் கூறுவது நம்பமுடியாத வகையில் உள்ளதாக கொழும்பில் உள்ள ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மொத்தத்தில் என்கவுண்டர் செய்யும் நோக்குடன் தான் தாருக நிலானை பொலிசார் அக்காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் என்றும் மேலும் அறியப்படுகிறது. வடக்கில் இத்தனை கொலை புரிந்தவர்களுக்கு, இது எல்லாம் சர்வ சாதாரணம் !