சீ.எம்மும் நானும் பக்கத்தில் இருந்தாலும் வேறுவேறுதான்; டக்ளஸ்

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற ரீதியில் தான் நாம் அனுக வேண்டுமே தவிர பிரச்சினைகளை தீர்காத வகையில் கலந்துரையாடுவது நல்லதல்ல. அதுபோல தான் ஊடகங்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
நேற்றைய தினம் கிளிநொச்சி மத்திய கல்லூரியின் மைதானம் தொடர்பில் நல்லநோக்குடன் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. கற்றல் நடவடிக்கையுடன் தொடர்பு படாதவிடயங்களுக்கு அனுமதி கேட்டால் என்னிடம் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்திருந்தேன். அவையும் இன்று வேறு விதமாகவே பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
எனவே பத்திரிகைகள் அரசியல் நோக்கமாக இருக்கலாம். அதுபோல நானும் முதலமைச்சரும் பக்கத்தில் இருந்தாலும் அரசியல் வேறுபாடுகள் இருக்கின்றது. எனினும் வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒரு பொதுநோக்குடனேயே இணங்கி செயற்பட்டு வருகின்றோம். எனவே ஊடகங்கள் சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
நான் இன்று காலை குறித்த மைதானத்தை சென்று பார்த்தேன். அங்கே இராணுவம் தவிர்ந்த திணைக்களங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் ஆகியனவும் தமது தேவைகளுக்கும் பாடசாலை மைதானத்தையே பயன்படுத்துகின்றன. இதனை மாவட்ட அரச அதிபரும் ஒத்துக்கொண்டுள்ளார். இவ்வாறு துரையப்பா விளையாட்டு மைதானமும் உள்ளது.பலர் தமது தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
எனினும் நான் பயந்தே இவ்வாறு கூறுகின்றேன் என்று நினைக்க வேண்டாம் பயந்த காலம் எல்லாம் போய்விட்டது. இருப்பினும் அப்போதும் கூட நான் பயந்தவனாக இருக்கவில்லை. அந்தக்காலத்திலேயே நான் எனது கருத்தை வெளிப்படையாகவே கூறிவந்துள்ளேன் என்றார்.
வடக்கு மாகாண முதலமைச்சரும் நானும் பக்கத்தில் இருந்தாலும் நாங்கள் வேறுபாடானவர்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் இரண்டாம் அமர்வின் இரண்டாவது நாள் இன்று நடைபெற்றது.
அதன் போதே ஊடகங்கள் தொடர்பில் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்களை குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் இரண்டாம் அமர்வின் இரண்டாவது நாள் இன்று நடைபெற்றது.