புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2014

இந்தியாவில் இலங்கை அகதிகளுக்கு பணம் வழங்கும் திட்டத்தில் புதிய கொள்கை 
இந்திய அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த பணக் கொடுப்பனவு அட்டையில் கை விரல் அடையாளம் பொறிக்கப்பட்டு அட்டைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த நடவடிக்கை எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வருவாய்த்துறை அதிகாரிகளின் கோரிக்கைக்கு இணங்க இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதனால் ஆள்மாறாட்ட மோசடிகளைத் தவிர்க்க முடியும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
 
இந்தியன் வங்கி முகாம்களுக்குச் சென்று ஒவ்வொருவரின் விரல் அடையாளங்களைப் பெற்று புதிய கொடுப்பனவு அட்டைகளை வழங்கவுள்ளது.
 
இந்தத் திட்டத்தின் மூலம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனித்தனியாகவும் அதற்கு கீழ்பட்டவர்களுக்கு பெற்றோருடனும் இணைத்து இந்த அட்டைகள் வழங்கப்படவுள்ளன.
 
செப்ரெம்பரில் ஆரம்பிக்கப்படும் இந்த நடவடிக்கை ஒக்ரோபர் மாதத்தில் அனைத்து முகாம்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மாதத்தின் முதலாவது மற்றும் மூன்றாவது வாரங்களில் அழைக்கப்பட்டு பதிவு மற்றும் பணக்கொடுப்பனவு அட்டைகளை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
 
அவ்வாறு உறுதிப்படுத்தத் தவறுபவர்களது அட்டைகள் நிறுத்தப்படும் என்றும் வருவாய்த் துறையினர் அறிவித்துள்ளனர்

ad

ad