""ஹலோ தலைவரே.. … ரம்ஜானையொட்டி சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்னு நாலு நாட்களுக்கு சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு விடுமுறை விடப் பட்டதால, ஸ்கூல் லீவுன்னதும் குஷியா வீட்டுக்குப் போற பிள்ளைகள் மாதிரி மந்திரிகளும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களும் சொந்த ஊருக்குப் போனதைப் பார்க்கணுமே?''
""லீவு முடிந்ததும், டீச்சரோட கண்டிப்பை நினைச்சி உற்சாகக் குறைவா பள்ளிக்கூடத்துக்குத் திரும்புற பிள்ளைகள் மாதிரி புதன் கிழமையன்னைக்கு அவங்க மறு படியும் சட்டமன்றத்துக்கு வந்திருப் பாங்களே?''
""உண்மைதாங்க தலைவரே.. இதில் இன்னொரு உண்மை என்னன்னா, லீவு முடிவதற்கு முன்னாடியே 3 மந்திரிகள் செமத்தியா ஜெ.கிட்டே டோஸ் வாங்கிக்கட்டியிருக்காங்க. அதனால தங்களோட பதவிக்கு எந்த நேரத்தில் என்னவிதமான ஆப்பு அடிக்கப்படுமோங்கிற உதறலிலேயே மூவரும் இருக்காங்க. மும்மூர்த்திகளில் முதலாமவர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி.''
""தாமோதரன்கிட்டேயிருந்து பறிக்கப்பட்ட வேளாண்மைத் துறைக்கு அமைச்சரான திருவண்ணாமலை மாவட்டத்துக் காரர்தானே?''
""மற்ற இரண்டு மாண்புமிகுக்கள் யார் யாராம்?''
""சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், விளையாட்டுத்துறை அமைச்சர் சுந்தர்ராஜனும்தான். இதிலே விஜயபாஸ்கர் தன்னோட மாவட்டமான புதுக்கோட்டையில் ரம்ஜான் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ஏற்பாடு செய்திருந்தார். ஆனா அதற்கு முதல்நாளான திங்கட்கிழமையே அவசரஅவசரமா சென்னைக்கு வரவேண்டியதாயிடிச்சி. அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள பயிற்சி டாக்டர்களும் முதுநிலை மருத்துவ மாண வர்களும் தங்களோட ஊக்கத் தொகையை உயர்த்திக் கொடுக்கக்கோரி தீவிரமா போராடிய தாலதான் மந்திரி தலைதெறிக்க ஓடிவரவேண்டியிருந்தது.''
""அந்தப் போராட்டம் பற்றி நானும் படிச்சேம்ப்பா.. சென்னை மெடிக்கல் காலேஜ், ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் இங்கெல்லாம் உள்ள பயிற்சி மருத்துவர்களும் முதுநிலை மருத்துவ மாணவர்களும் காலவரையற்ற போராட்டம் நடத்தியதையும், கடைசியா ஓமந்தூரார் வளாகத்தில் தலை மைச்செயலகத்துக்காகக் கட்டப்பட்டு இப்ப பல்நோக்கு மருத்துவமனையாகியிருக்கும் இடத்திலேதான் அமைச்சரும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மெடிக்கல் காலேஜ் டைரக்டர் கீதாலட்சுமி ஆகியோர் முன்னிலையிலே போராட்டக்காரர்கள் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு உடன் பாட்டுக்கு வந்து போராட் டத்தைக் கைவிட்டதா பேப் பர்களில் செய்தி வந்தது. டி.வி. நியூசிலும் காட்டினாங்க.''
""இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடந்த ஒரு போராட்டத்தைத்தான் நான் சொல்லப்போறேங்க தலைவரே.. .. வெளியே வந்த மந்திரி விஜயபாஸ்கரை மீடியாக்கள் கருத்துகேட்டபடியே படம் எடுக்க, மந்திரி செம டென்ஷனாகி, என்னைப் போட்டோ எடுக்காதீங்க. போய் உங்க பொண்டாட்டிகளை எடுங்கன்னு சொல்லிக் கடுமையாப் பேச செய்தியாளர் களெல்லாம் கடுப்பாகி, மந்திரியை சரமாரியா கேள்வி கேட்டு கோபத்தோடு பேச, அங்கிருந்து விறுவிறுன்னு கிளம்பிட்டாரு மந்திரி விஜயபாஸ்கர்.''
""போராட்டத்தை சுமுகமா முடித்துவைத்தது பற்றி மீடியாக்கள் கேட்டா பதில் சொல்லிட்டுப் போகவேண்டி யதுதானே.. போராட்டத்தை நடத்திய கூட்டமைப் போட நிர்வாகியான டாக்டர் ஜானகிராமன் வெளியிட்ட அறிக்கையில்கூட, ஆகஸ்ட் 11-ந் தேதி சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையில் எங்களோட கோரிக்கையை நிறைவேற்றித் தருவதா பேச்சுவார்த்தையில் உறுதியளிச்சிருப்ப தால முதலமைச்சர் அம்மா மேலே நம்பிக்கை வச்சி போராட்டத்தைக் கைவிடுறோம்னு சொல்லியிருக்காரே! அது மாதிரி மந்திரியும் மீடியாக்கள்கிட்டே சொல்லிடவேண்டி யதுதானே!''
""தலைவரே.. போராட்டக் குழுவோட அறிக்கையே மந்திரி தயாரிச்சிக் கொடுத்ததுதான். எந்த இடத்திலும் மந்திரியோட பேரோ அதிகாரிகள் பேரோ வராம, ஜெ.மேலே மட்டும் நம்பிக்கை தெரிவிக்கிற மாதிரியான அறிக்கை தயாரிக்கப்பட்டது. அரசாங்க கட்டளையே இதுதான்னு கோட்டை வட்டாரத்தில் சொல்றாங்க. போக்கு வரத்து தொழிலாளர்களோட போனஸ் சம்பந்தமா துறை மந்திரி பேச்சு வார்த்தை நடத்துறாரு. கூட்டுறவு சங்க ஊழியர்களோடு அந்த துறை மந்திரி பேசுறாரு. பால் உற்பத்தியாளர்களோடு சம்பந்தப்பட்ட மந்திரி பேசுறாரு. இது சம்பந்தமான போட்டோ எதை யாவது பார்த்திருக்கீங்களா? டி.வி.யில் ஏதாவது கிளிப்பிங்ஸ் பார்த் திருக்கீங்களா? அதெல்லாம் வரவே வராது. அதுதான் அரசாங்கத்தோட கட்டளை. சொந்த தொகுதிக்கு போகும்போது பொதுமக்கள் கொடுக்கிற மனுவை வாங்குவதை மட்டும்தான் செய்தியா வெளியிட அனுமதி உண்டு. போராட்டக்காரங்களோடு பேச்சுவார்த்தை நடத்திட்டு வந்த மந்திரி விஜயபாஸ்கருக்கும் இதே பிரச்சினைதான். அது பற்றிய செய்தி வந்தாலோ போட்டோ எடுத்துப் போட் டாலோ அவரோட பதவி டண்டணக்காதான்.''
""26 வயசிலே எம்.எல்.ஏவாகி 38 வயசிலே மந்திரியாகியிருக்காரு. அதைக் காப்பாத்திக்க ணும்னு நினைக்கிறது தப்பில்லையே?''
""ஆனாலும் மீடியாக்களோடு மந்திரி மல்லுக் கட்டுனதும் கன்னாபின்னான்னு பேசுனதும் புகாராகப் போய் சேர, ஜெ. புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் கூப்பிட்டு விசாரிச்சிருக்காரு. மீடியாகாரங்களைத் திட்டியதில் ஜெ.வுக்கு ஒரு கோபமும் இல்லையாம். இதையே சீனியர் மந்திரிகள் செஞ்சிருந்தா அவர் கவலைப்பட்டிருக்க மாட்டார். ஜூனியர் மந்திரியான விஜயபாஸ்கர் எக்குத்தப்பா எதையாவது பேசியிருந்தா என்னாவதுங்கிறதுதான் ஜெ.வோட கோபத்துக்குக் காரணமாம். அதனால செமத்தியா டோஸ் விழுந்திருக்குது. உண்மையைச் சொன்னா இன்னும் வாங்கிக் கட்டிக்கணுமேன்னு அப்படியே நின்னுக்கிட்டிருந்தாராம் மந்திரி.''
""பத்திரிகையாளர்களை விஜயபாஸ்கர் திட்டியதை மீடியாக்காரர்கள் பலரும் சேர்த்து அரசியல் பிரமுகர்களின் கவனத்துக்குக் கொண்டுபோனதை யும் அதையடுத்து சட்டமன்றத்தில் இதுதொடர்பா தே.மு.தி.க சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுக்கப்பட்டதுன்னும் வாட்ஸ்ஆப்பில் தகவல் வந்ததுப்பா. அதனாலதான் ஜெ. முன்கூட்டியே டோஸ் விட்டிருக்கிறாரு. விளையாட்டுத் துறை மந்திரி சுந்தர்ரராஜன் மேலே என்ன கோபம்?''
""ஆகஸ்ட் 12-ந் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிஞ்சதும் பரபர மாற்றங்கள் இருக்கும்னு எதிர்பார்க்க லாம்!''
""ஆமாங்க தலைவரே.. .. .. சட்ட மன்றத்தில் ஜனநாயகம் படும்பாடுன்னு ஜூலை 31, ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் சென்னையிலும் மற்ற இடங்களிலும் தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. 1-ந் தேதி மதுரை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதால பொறுப்புக்குழு உறுப்பினர் ஜெயராம் பல இடங்களி லும் போஸ்டர் களை ஒட்டி னாரு. அதனால அவர் மேலே 8 ஸ்டேஷன் களில் 9 கேஸ்கள் போடப்பட்டிருக் குது.''
""போஸ்டருக்கே கேஸா?''
""ஆமா.. அதைப் பற்றி நான் சொல்றேன். கலைஞர், ஸ்டாலின் படங்களோடு போஸ்டர் அடிச்ச தோடு, அதில் ஜெயா அரசைக் கண்டித்துன்னு வாசகங்களும் இருந்ததாலதான் இந்த கேஸ். மதுரை நகரம் முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்களைக் கிழிக்கிறதுக்காக ஒவ்வொரு ஸ்டேஷனிலிருந்தும் 15 போலீஸ்னு 120 போலீஸ்காரங்க கிழி கிழின்னு போஸ்டர்களை கிழிச்சிருக் காங்க. 37 எம்.பி. சீட்டு ஜெயிச்சாலும், 44% ஓட்டு வாங்கியிருந்தாலும் அ.தி.மு.க தலைமைக்கு தி.மு.க பொதுக்கூட்டம் ஒழுங்கா நடந்திடக்கூடாதுங்கிற கவனம் அதிகமாகவே இருக்குது.''