ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீடு தொடர்பாக முடிவு எடுக்க சில நாட்கள் தேவைப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு தொடர்பாக கர்நாடக அரசுக்கு அம்மாநில அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமார் கடிதம் எழுதியுள்ளார். சட்டத்துறை செயலாளருக்கு அவர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பரிந்துரை பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. இந்தக் கடிதத்தின் நகல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பதிவாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதனிடையே கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் வரும் 21ஆம் தேதி கூடுகிறது என்றும், அன்றைய தினம் தலைமை வழக்கறிஞரின் கடிதம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.