பதினொரு வயது சிறுமியை கட்டியணைத்து முத்தமிட்டமை தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட புத்த பிக்குவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெகியத்த கண்டிய நீதிவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட புத்த பிக்குவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
தெகியத்த கண்டிய- மொரதெனிய விகாரையின் புத்த பிக்கு ஒருவர் விகாரையின் அருகேயுள்ள வீடொன்றிற்குள் புகுந்து தனிமையில் இருந்த 11 வயது நிரம்பிய சிறுமியை கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளார்.
இதனை குறித்த சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்க, பெற்றோர் தெகியத்த கண்டிய பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய கைது செய்யப்பட்ட பிக்கு நிதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.