பிரித்தானியா அவசர உதவிகளை வழங்குகிறது ஒரு நாளில் மட்டும் சுமார் 5,700 பேர் இந்தியாவில் கொரோனாவால் இறந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எந்த ஒரு ஓசையும் இன்றி, இரட்டிப்பு மடங்கு வீரியம் கொண்ட உருமாறிய இந்திய கொரோனா வைரஸ் திடீரென பரவ ஆரம்பித்துள்ளது. இது சீனாவின் வேலையாக கூட இருக்கலாம் என்றும் எண்ணும் அளவுக்கு, இந்த தொற்று வலுப்பெற்று வருகிறது. மேலும் சொல்லப் போனால் ஒரு நாளைக்கு 4 லட்சம் பேருக்கு கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது. நாம் 5 தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்டது போல இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளது. இன்றைய தினம் 1 பிரித்தானிய பவுண்டுக்கு 105 இந்திய ரூபா என்ற மதிப்பில் உள்ளது… வழமையாக…
86 தொடக்கம் 90 ரூபா வரை தான் இருந்து வந்துள்ளது. இன் நிலையில் பல நூறு வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு பிரித்தானியா அவசரமாக அனுப்பி வருகிறது. அசமந்த போக்கை கடைப்பிடித்த மோடி அரசே இதற்கு காரணமாக உள்ளது. இதனை இந்திய மக்கள் உணர்வார்களா தெரியவில்லை. ஆக்சிஜன் சப்பிளை செய்யும் கம்பெனிகளில் வேலை பார்க்கும் அதிகாரிகள் சரியாக அதனை வினியோகிக்க தவறினால், அவர்களுக்கு நேரடிய மரண தண்டனை வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் பணித்துள்ள