புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2024

புதிய பிரதமரை நியமிப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உறுதி! [Friday 2024-12-06 08:00]

www.pungudutivuswiss.com

மிஷெல் பார்னியேர் ராஜினாமா செய்த பின்னர், வரும் நாட்களில் புதிய பிரதமரை நியமிப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உறுதியளித்துள்ளார். பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரதமர் மிஷெல் பார்னியேரின் அரசாங்கம் கவிழ்ந்தது. ஜனாதிபதி மேக்ரான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ராஜினாமா செய்வதற்கான எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தார். மட்டுமின்றி, 2027ல் ஆட்சி முடியும் வரை முழுமையாக ஜனாதிபதியாகத் தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மிஷெல் பார்னியேர் ராஜினாமா செய்த பின்னர், வரும் நாட்களில் புதிய பிரதமரை நியமிப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உறுதியளித்துள்ளார். பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரதமர் மிஷெல் பார்னியேரின் அரசாங்கம் கவிழ்ந்தது. ஜனாதிபதி மேக்ரான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ராஜினாமா செய்வதற்கான எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தார். மட்டுமின்றி, 2027ல் ஆட்சி முடியும் வரை முழுமையாக ஜனாதிபதியாகத் தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும், பிரதமர் மிஷெல் பார்னியேரின் ஆட்சியை கவிழ்க்க குடியரசுக்கு எதிர்ப்பு முன்னணியில் ஐக்கியப்பட்டதற்காக பிரெஞ்சு தீவிர வலதுசாரிகளையும் கடும்போக்கு இடதுசாரிகளையும் அவர் கடுமையாக சாடினார்.

எதிர்வரும் நாட்களில் புதிய பிரதமரை நியமிப்பதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மேக்ரான், வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமையளித்து மக்கள் நலனுக்கான அரசாங்கத்தை" உருவாக்குவதற்கு அவர் முன்னுரிமை அளிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2027 ஜனாதிபதி தேர்தலை குறிவைத்துள்ள National Rally கட்சி நாட்டில் குழப்பத்தை உருவாக்கி ஆதாயம் தேடப்பார்ப்பதாகவும் மேக்ரான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ad

ad