புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2024

கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கனடிய பிரதமரிடம் மீண்டும் கோரிக்கை! [Monday 2024-12-30 17:00]

www.pungudutivuswiss.com

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பிராந்தியத்தின் லிபரல் கட்சி உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். ஜஸ்டின் ட்ரூடோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பிராந்தியத்தின் லிபரல் கட்சி உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். ஜஸ்டின் ட்ரூடோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசேட கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவி விலக வேண்டும் என, நியூ பிரவுன்ஸ்விக் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வெயன் லோங் கோரியுள்ளார்.

எதிர் வரும் தேர்தலில் வெற்றி ஈட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டுமாயின் நிச்சயமாக பிரதமர் கட்சித் தலைமையில் இருந்து பதவி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார் அவ்வாறு செய்யத் தவறினால் கான்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை நிறுவும் என அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் அட்லாண்டிக் பிராந்திய வலய மாகாணங்களின் லிபரல் கட்சி உறுப்பினர்கள் பிரதமர் பதவி விலக வேண்டும் என கோரியுள்ளனர்.

கட்சித் தலைமை பதவியில் இருந்து அவர் விலக வேண்டுமென இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமர் ட்ரூடோவிற்கு எதிராக மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.

இது எதிர்வரும் ஜனவரி மாதம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும் என தெரிவிக்கப்படுகிறது

ad

ad