புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2025

16 நாட்களில் 5 பேர் சுட்டுக்கொலை -நாட்டில் என்ன நடக்கிறது? [Friday 2025-01-17 05:00]

www.pungudutivuswiss.com


2025 ஆம் ஆண்டின் முதல் 16 நாட்களில் மன்னாரில்  இடம்பெற்ற சம்பவம் உட்பட, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை பாதாள உலக பிரமுகர்களால் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தக் குற்றச் செயல்களை உடனடியாக ஒடுக்கவும்  இந்த நடவடிக்கைகளை வழிநடத்துபவர்களை சட்டத்தின் முன் கொண்டு வரவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை வலியுறுத்தியுள்ளார்.

2025 ஆம் ஆண்டின் முதல் 16 நாட்களில் மன்னாரில் இடம்பெற்ற சம்பவம் உட்பட, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை பாதாள உலக பிரமுகர்களால் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தக் குற்றச் செயல்களை உடனடியாக ஒடுக்கவும் இந்த நடவடிக்கைகளை வழிநடத்துபவர்களை சட்டத்தின் முன் கொண்டு வரவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை வலியுறுத்தியுள்ளார்.

விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள பிரேமதாச, இந்த சம்பவங்களினால் சாதாரண குடிமக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை சுதந்திரமாகவும் அச்சமின்றியும் மேற்கொள்ள முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டின் முதல் 16 நாட்களில் ஐந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ள ஆபத்தான சூழ்நிலையை நான் சுட்டிக்காட்ட வேண்டும். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனால் சாதாரண குடிமக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை சுதந்திரமாகவும் அச்சமின்றியும் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி தற்போது வெளிநாட்டில் உள்ள 188 நபர்களுக்கு சர்வதேச சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களில், 63 பேர் கொலைகள், பணம் பறித்தல், மிரட்டல் மற்றும் பிற சமூக விரோத செயல்கள் உட்பட வெளிநாடுகளில் இருந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்வது எந்தவொரு அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும். குடிமக்களின் பாதுகாப்பைக் கட்டிக் காத்தல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சுகாதாரம், உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான அணுகலை உறுதி செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.

இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கு உடனடி மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் மற்றும் அனைத்து பாதுகாப்புப் படைத் தலைவர்களையும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நிலைமை அதிகரித்தால், அது சாதாரண பொதுமக்களின் வாழ்க்கையை கடுமையாக சீர்குலைக்கும் மற்றும் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளைச் செய்வதற்கான மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும்" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad