உலக அழகியாக சீனப் பெண் தெரிவு

இந்த ஆண்டுக்கான உலக அழகியாக சீனாவைச் சேர்ந்த வென் சியா யூ, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சீனாவின், பீஜிங் நகரில், உலக அழகிப் போட்டி நடந்தது. 115 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இதில் பங்கேற்றனர்.இந்தியாவின் சார்பில் வன்யாமிஸ்ரா கலந்து கொண்டார். ஆனால், இறுதி சுற்று வரை வந்த அவர் தேர்வாகவில்லை.

சீனாவின் வென் சியா யூ, உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் இடம் பிரிட்டனைச் சேர்ந்த வேல்ஸ் அழகி ஷோபிக்கும், மூன்றாம் இடம் அவுஸ்திரேலிய அழகி ஜெசிகாவுக்கும் கிடைத்தது. உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட வென் சியா, இசை ஆசிரியையாக விரும்புவதாக தெரிவித்தார்.