தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவது தமிழர்களாகிய நமது கையில்தான் உள்ளது – திருச்சியில் சீமான் பேச்சு.
தலைவர் பிரபாகரன் மீண்டும் வருவது தமிழர்களாகிய நமது கையில்தான் உள்ளது என
திருச்சியில் நேற்று நடைபெற்ற நாம்தமிழர் கொள்கை முழக்கப் பொதுக்கூட்டத்தில்
பேசியுள்ளார் செந்தமிழன் சீமான் அவர்கள். தமிழினத்தை ஒட்டுமொத்தமாக கொன்றழித்த
ராசபக்சேவுக்கு ஒட்டுமொத்த சிங்கள இனமும் ஆதரித்து நின்றது. சிங்களத்தின்
தனிப்பெரும் தலைவவனாக ராசபக்சே விளங்குவதற்கு சிங்கள இனத்தின் இந்த ஒன்றுபட்ட ஆதரவே
காரணமாகும்.
தமிழர்களாகிய நாம் எவ்வளவுதூரம் தலைவனிற்கு ஆதரவாக இருந்தோம்? தமிழினத்தை காப்பதற்கு தலைவன் போராடியபோது நம்மில் எத்தனைபேர் ஆதரித்தோம்? இனிமேல் அந்த நிலைமாறவேண்டும். எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் திரும்பி வருவது தமிழர்களாகிய எமது கைகளில்தான் உள்ளது.
திருச்சி வேலுச்சாமி அவர்கள் எழுதிய ராஜீவ் படுகொலை – தூக்குக் கயிற்றில் நிஜம் என்ற நுலை வெளியிட்டுப் பேசிய சீமான் தூக்குத்தண்டனை எங்கு யாருக்கு நிறைவேற்றப்பட்டாலும் நாம் எதிர்ப்போம் எனத்தெரிவித்தார்.
தூக்குக் கயிற்றின் நிழலில் நிற்கும் மூன்று தமிழர்களைக் காக்கும் ஆயுதமாக இந்த தூக்கு கயிற்றில் நிஜம் நூல் விளங்கும். இதனை இளைஞர்கள் அத்தனை பேரும் கண்டிப்பாக படிக்க வேண்டும். இந்த நுலை படித்து முடித்தபின் அட தவறிழைத்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி ஒவ்வொருவரது மனதிலும் எழும்.
இவர்கள் 21 ஆண்டுகளாக அழுகிய பிணத்தை வைத்து அரசியல் செய்கின்ற போது நாம் அழிவின் விழிம்பில் நிற்கும் தமிழினத்தை காப்பாற்றத் துடிக்கின்றோம். அதற்காகவே நாம் தொடர்ந்து போராடுகின்றோம் என்றார் சீமான்.
ஈழம் உருவாவது நிச்சயம் தலைவர் மீண்டும் வருவார் - திருச்சிய வேலுச்சாமி.
தூக்குக் கயிற்றில் நிஜம் என்ற வரலாற்று பொக்கிசத்தை உலகிற்கு வழங்கிய திருச்சி வேலுச்சாமி பேசும்போது ஈழம் என்ற நாடு உருவாவது நிச்சயம். தலைவர் மீண்டும் வருவார் என உறுதிபடத் தெரிவித்தார்.
தமிழக அரசியல் தலைவர்களிடம் ஒற்றுமையில்லாத நிலை நீடித்துவருவதால்தான் தமிழர்களை யாரும் மதிக்கமாட்டார்களாம். தமிழர்களிற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள்கூட அண்டை மாநிலங்களால் பறிக்கப்படுகின்றது.
சாதி தான் மிக்பெரிய எதிரியாக எமக்குமுன் நிற்கின்றது. சாதியை ஒழித்தால்தான் நாம் ஒன்றுபட முடியும். சாதியை ஒழித்தால்தான் சில இலட்சம் மக்களை வைத்துக்கொண்டு இன்று உலகத்தையே திரும்பிப்பார்க்கவைக்க தலைவர் பிரபாகரன் அவர்களால் முடிந்தது.
நாம் எழுகோடி பேர் இருந்தும் எதுவுமே சாதிக்க முடியாதவர்களாக இருப்பது எமக்குள் சாதி தலைதூக்கியுள்ளதால்தான்.
உலக வல்லரசான அமெரிக்காவிற்கு இஸ்ரேல் என்ற சின்னஞ்சிறிய நாடுதான் அதன் பலத்திற்கு அத்திவாரம். உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவிற்கு ஈழம்தான் பலமாக திகழுமும் எனப்பேசினார் வேலுச்சாமி அவர்கள்.