தென்கொரியா மீது வடகொரியா தாக்குதல்!- இலங்கைப் பணியாளர்களை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை
தென்கொரியாவின் மீது வடகொரியா திடீரென தாக்குதல் நடத்துமாயின் அங்குள்ள இலங்கை பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கவனம் செலுத்தி வருகின்றது.
இன்று மாலை வெளிநாட்டு வேலைவாய்ப்பு விரிவாக்கல் அமைச்சரின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தென்கொரியாவுடன் தமது நாடு போர் தொடுத்துள்ளதாக வடகொரிய நேற்று முன்தினம் உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளது. இதன்படி, திடீர் தாக்குதல்கள் நடத்தப்படுமாயின் தென்கொரியாவில் உள்ள இலங்கை பணியாளர்களை துரிதமாக நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி குறிப்பிபட்டார்.
இதன்பொருட்டு, சர்வதேச புலம்பெயர்வு சம்மேளத்தில் ஆதரவினையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தெற்கொரியாவில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட இலங்கை பணியாளர்கள் உள்ளனர். அதேவேளை, பதிவு செய்யப்படாத வகையில் தென்கொரியாவில் பல பணியாளர்கள் செயற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கடமை என்றும் குறித்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.