வவுனியாவில் இன்று பண்டாரவன்னியன் நினைவு தின விழா நடைபெற்றது
வடமாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணி சிற்றம்பலம், அருணா செல்லத்துரை, அகளங்கன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் பண்டார வன்னியன் பாடல் சிற்றம்பலம் அவர்களால் வவுனியா முன்னைநாள் உப நகரபிதா சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களுக்கு வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழ் மாமன்றத்தின் கவியரங்கமும் , கலைஇலக்கிய நண்பர்கள் வட்டத்தினால் வரலாற்று சிறப்புமிக்க முல்லை மணி எழுதிய பண்டார வன்னியன் நாடகமும் அருணா செல்லத்துரை அவர்களின் வரலாற்று ஆய்வுரையும் இடம்பெற்றது.


